News

ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையில் டிஜிட்டல் மையம் திறக்கப்பட்டது

கோவை:
ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் புதிதாக டிஜிட்டல் பல் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.

ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையில் பிளாசம்ஸ் டிஜிட்டல் டென்டிஸ்ட்ரி கிளினிக்கை எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி திறந்து வைத்தார். கல்லுாரி முதல்வர் தீபானந்தன், அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவகண்காணிப்பாளர் அழகப்பன் உடனிருந்தனர்.

கிளினிக்கில் உள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு நோயாளிகளுக்கு விரைவான மற்றும் துல்லியமான பல் நோயறிதல் மற்றும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நேவிகேஷன் இம்ப்லான்ட் பிளேஸ்மென்ட் கருவி (நேவிடென்ட்) ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ளது.

நோயாளிகளின் பல் பிரச்னைகளை துல்லியமாகவும், குறைந்த நேரம் மற்றும் குறைந்த செலவிலும் செய்து முடிப்பது இந்த டிஜிட்டல் மையத்தில் சிறப்பம்சமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button