Education

அரசு தேர்வுகளில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி வகுப்புகள் – கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்க, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும் பிற அரசு தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளில் வெற்றிபெற உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், TNPSC மற்றும் பிற அரசு தேர்வாணையங்கள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில், 100 மாற்றுத்திறனாளிகளை கொண்ட பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த வகுப்புகள் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கும் வசதியுடன், 01.08.2024 அன்று காலை 10:00 மணியளவில் சி.எஸ்.ஜி. காது கேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் உயர் சாலை, மயிலாப்பூர், சென்னை இல் நடைபெறும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விரும்பும் மாற்றுத்திறனாளிகள், 29.07.2024-க்குள் scdaplacement@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button