லூலூ மால் இருக்கட்டும்! கோவையில் பிரம்மாண்டமாக வருது பெரிய மால்! யாருன்னு பார்த்தா ஆடிப்போய்டுவீங்க
கோவை; கோவையில் ஏற்கனவே லூலூ ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவையில் பீனிக்ஸ் மால் அங்கே கட்டப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. பிரபல மால்கள் பல அடுத்தடுத்து கட்டப்பட்டு வரும் நிலையில் இப்போது பீனிக்ஸ் மால் அங்கே வர உள்ளது.
ரியல் எஸ்டேட் மேஜர் ஃபீனிக்ஸ் குழுமம் அவிநாசி சாலையில் ரேடிசன் ப்ளூவுக்கு அடுத்ததாக ஒரு பிரைம் லேண்ட் பார்சலை வாங்கியுள்ளது. அங்கு பிரீமியம் மால் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ‘தி ஃபீனிக்ஸ் மில்ஸ் லிமிடெட்’ கோவையில் முதலீடு செய்ய உள்ளது. ஃபீனிக்ஸ் நிர்வாக இயக்குனரின் கூற்றுப்படி, தற்போது அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் 10 மால்கள் இயங்கி வருகின்றன.
அதோடு இந்தியா முழுவதும் 3 மால்கள் கட்டப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், சண்டிகர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஒரு மால் கட்டப்பட உள்ளது.
ஏற்கனவே லுலு மால் ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூரில் உள்ள லட்சுமி மில் வளாகத்தில் கட்டப்பட்டு உள்ளது. லுலு மால் கோயம்புத்தூர் கிட்டத்தட்ட 1.1 லட்சம் சதுர அடி இடத்தைக் கொண்ட இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஹைப்பர் மார்க்கெட் ஆகும்.
இந்த மால் லுலு குரூப் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமானது. அங்கு உள்ள இரண்டு வணிக வளாகங்களில் ரூ.2,500 கோடியும், உணவு பதப்படுத்தும் பிரிவில் ரூ.1,000 கோடியும் முதலீடு செய்ய உள்ளது. இந்த மால் 14 ஜூன் 2023 அன்று திறக்கப்பட்டது.
இப்படி கோவையில் பிரபல மால்கள் பல அடுத்தடுத்து கட்டப்பட்டு வரும் நிலையில் பீனிக்ஸ் மால் அங்கே கட்டப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
பைவ் ஸ்டார் ஹோட்டல்கள்; மால்கள் மட்டுமின்றி பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் கூட கோவையில் வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களில் 5 நட்சத்திர, 3 நட்சத்திர ஹோட்டல்களை திறக்க மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இனி தமிழ்நாட்டின் தொழில்துறைப் பகுதிகளில் வேலை நிமித்தமாகப் பயணம் செய்பவர்கள் விரைவில் நல்ல ஹோட்டல்களில் தங்க முடியும். தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் பெரிய நிறுவனங்கள் ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதிலும் உள்ள பெரிய ஹோட்டல் பிராண்டுகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய ஹோட்டல்கள் தொழில்துறைகள் அதிகம் உள்ள சிறிய நகரங்களில் சொகுசு ஹோட்டல்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளன. கிருஷ்ணகிரி, ஓசூர், பெருந்துறை, கோவை, தூத்துக்குடி போன்ற இடங்களும், சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளும் ஹோட்டல் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளன. இங்கே சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அதீத முதலீடுகள் காரணமாக தொழிற்புரட்சிகள் நடக்க தொடங்கி உள்ளன.
இதை மனதில் வைத்தே ஹோட்டல் நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளன. உதாரணமாக, ஐடிசி லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான பார்ச்சூன் பார்க் ஹோட்டல் லிமிடெட், ஜனவரி மாதம் கிருஷ்ணகிரியில் 107 அறைகள் கொண்ட ஹோட்டலைத் திறந்தது.ஓசூர் பல தொழிற்சாலைகளுக்கு அருகில் இருப்பதால், அவர்களின் வணிகத்திற்கு பெரும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு நிறுவனமான ஜிஆர்டி ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்தது.
அதேபோல் ஓசூர், ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் புதிய ஹோட்டல்களை கட்ட முடிவு செய்துள்ளது. ஆட்டோமொபைல், பர்னிச்சர் மற்றும் விண்வெளி போன்ற தொழில்களில் திட்டங்கள் மற்றும் தூத்துக்குடி VOC துறைமுகத்தின் மேம்பாடுகளால் இங்கே புதிய பெரிய நிறுவனங்களின் ஹோட்டல்கள் வர தொடங்கி உள்ளன.