சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் இன்று ஜப்பானில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முடியவில்லை என்று சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
தன் மகன் மீது அதிகமான பாசம் வைத்திருக்கும் நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக அவருக்கு பிடித்த யூ டிப்பர் இர்பானை அமெரிக்கா வீட்டிற்கு அழைத்து தன்னுடைய வீட்டை சுற்றி காட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு பிறகு தான் நெப்போலியன் அன்பு பலருக்கும் தெரியவந்தது.
அதற்கு முன்பு அவர் சினிமாவில் வில்லனாகவும் கதாநாயகன் நடித்திருந்தாலும் அவருடைய குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் காதல், பாசம் எல்லாம் அந்த வீடியோவில் எல்லோருக்கும் தெரிய வந்தது. அதோடு தன்னுடைய மகனுக்காக பார்த்து பார்த்து அவர் செய்யும் பல விஷயங்கள் பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, தான் உயிரையே வைத்திருக்கும் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நெப்போலியன் அதற்காக பெண் பார்த்தபோது திருநெல்வேலி மாவட்டத்தின் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரை நெப்போலியன் மகனுக்கு பிடித்திருக்கிறது.
இரு வீட்டாரின் சம்மதத்திற்கு பிறகு இருவரும் போனில் பேசி இருக்கிறார்கள். பிறகு இருவரின் மனமும் ஒத்து போனதும் வீடியோ காலில் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று திருமணம் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி திரையுலகை சார்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று ஒரு வீடியோவில் வருத்தப்பட்டு நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்டு பேசி இருக்கிறார்.
அதில் நெப்போலியன் சார் நீங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல். என்னுடைய
கஷ்டமான காலங்களில் என் கூட இருந்திருக்கீங்க. இந்த நேரத்தில் நான்
கல்யாணத்திலிருந்து எல்லா வேலைகளையும் செய்து இருக்கணும். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் வந்து
உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன் சார். இந்த நிகழ்வு உங்க மனசு
மாதிரி ரொம்ப நல்லா நடக்கட்டும் சார். தனுஷ் தம்பி உங்களுக்கும் என்னுடைய திருமண வாழ்த்துக்கள் என்று அந்த வீடியோவில் பேசி
இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் பிரபலமடைந்திருக்கும் நிலையில் அவர் தொடர்ச்சியாக இங்கு வேலையில் இருப்பதால் அவரால் ஜப்பானுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்திருக்கலாம். ஆனாலும் மன்னிப்பு கேட்டு அவர்
வெளியிட்ட வீடியோ இப்போது பலருடைய வாழ்த்துக்களை பற்றி
வருகிறது.