சென்னை: உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள் தான். கொஞ்சம் கவனம் தவறினாலும் பெரிய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இதனால் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய 15 அறிவுரைகளை பார்க்கலாம்..
உலகெங்கும் வசிக்கும் இந்து மக்களிடையே வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தீபாவளி பண்டிகை என்றாலே உற்சாகமும் கொண்டாட்டமும் வழிந்தோடும்.
இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடைகள் என அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடும். அதே நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் எந்தவித பிரச்சனைகளும் இன்றி சிறப்பாக தீபாவளியை கொண்டாட இந்த 15 வழிமுறைகளை நீங்கள் கையாண்டாலே போதும். அது என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.. 1. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே மக்கள் வெடிக்க வேண்டும். வியாபாரிகளும் அது போன்ற பட்டாசுகளையே விற்பனை செய்ய வேண்டும். 2.பட்டாசுகள் வெடிப்பதற்காகவே உச்ச நீதிமன்றம் காலை 6 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 வரை மணி வரையிலும் இரண்டு மணி நேரம் ஒதுக்கி உள்ளது. எனவே அந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
3.125 டெசிபல் அளவுக்கு மேல் சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகள், சரவெடிகள், சீன தயாரிப்பு பட்டாசுகளை வெடிக்க கூடாது. 4. பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அவற்றின் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இதே போல குடிசை அருகிலேயும் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நல்லது. 5.பட்டாசுகளை கையில் பிடித்து பிடிப்பது மேலே தூக்கிப்போட்டு விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடவே கூடாது.
6. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிப்பது தேவையில்லாத சிரமங்களை ஏற்படுத்தும். 7. பட்டாசுகள் விற்பனை செய்யும் கடைகள் பட்டாசு வைத்திருக்கும் வீடு உள்ளிட்டவற்றில் புகை பிடிப்பது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. 8 பட்டாசு கடைகளுக்கு அருகே விளம்பர நோக்கிலோ அல்லது பிற கடைகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பது தடை செய்யப்பட்டு இருக்கிறது. 9.மழை உள்ளிட்டவற்றின் காரணமாக பட்டாசுகள் நனைந்து விட்டால் அவற்றை சமையலறையில் அறை அல்லது அடுப்பு உள்ளிட்டவற்றின் அருகில் வைத்து சூடு படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
10. கம்பி மத்தாப்பு உள்ளிட்டவற்றை பற்ற வைப்பதற்காக பட்டாசுகளின் அருகில் மெழுகுவர்த்தி விளக்கு உள்ளிட்டவற்றை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். 11.குழந்தைகள் முதியவர்கள் இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் குடியிருப்பு பகுதிகளில் வசிக்க வாய்ப்பு இருப்பதால் பெரும் சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்ப்பது நல்லது. 12. தீபாவளி என்பது மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக மட்டுமே எனவே பிறருக்கு தொந்தரவு இல்லாமல் பட்டாசு வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். 13.சங்கு சக்கரங்கள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பற்ற வைப்பதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. 14. சரவெடி வான வேடிக்கை உள்ளிட்டவற்றை கைகளில் எடுத்து வெடிப்பதை முழுவதுமாக தவிர்ப்பது, எந்தவித காயமும் ஏற்படாமல் தவிர்க்க உதவும். 15. ஒருவேளை காயம்பட்டாலும் உடனடியாக அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றி கொடுமைப்படுத்தி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் பேனா, மை, கரி, எண்ணெய் உள்ளிட்டவற்றை பூசுவதை தவிர்க்க வேண்டும்.