ஒட்டாவா: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்னையில் மேலும் எண்ணெய் ஊற்றியதை போல, தற்போது இந்து கோயிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்
கனடாவில் சீக்கிய தலைவர்களில் ஒருவரான நிஜ்ஜார் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா-கனடா உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலைக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம்சாட்டியுள்ளது. குற்றச்சாட்டை இந்தியா கறாராக மறுத்தாலும், கனடா இந்தி விஷயத்தை லேசாக விடுவதாக தெரியவில்லை. தொடர் குற்றச்சாட்டு, இந்தியா குறித்து அமெரிக்க ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது. மத்திய உள்துறை அமைச்சர் மீது நேரடியான குற்றச்சாட்டு என கனடா கொலை வழக்கில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த மோதலின் ஒரு பகுதியாக இரு நாடுகளிலிறந்தும் தூதரக அதிகாரிகள் சிலர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில், இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் விதமாக மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது கனடாவின் பிராம்டன் பகுதியில் உள்ள இந்து கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து காவல்துறை யாரையும் இன்னும் கைது செய்யவில்லை. ஆனால் சம்பவம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுடனான மோதல் போக்குக்கு காலிஸ்தானியர்களின் நடவடிக்கைதான் காரணம் என. கனடா அரசியல் தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டியதாகவும், எனவே ஆத்திரமடைந்த சீக்கிய பிரிவினைவாதிகள் கோயில் மீதும், கோயிலில் உள்ள பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டியதாகவும் சொல்லப்படுகிறது. தாக்குதலையடுத்து கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்த சமயத்தில் கோயிலில் பெண்களும், குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்களின் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டுமல்லாது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கெனவே நிஜ்ஜார் விவகாரத்தில், இந்தியா தலையிட்டிருந்தபோது அதற்கு கனடா அரசு உரிய ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இவ்வளவு பிரச்னை ஏற்பட்டிருக்காது. ஆனால், பிரச்னையை வளர்த்தே கனடாதான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கோயில் பக்தர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ட்ரூடோ, “பிராம்டன் இந்து கோயிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. கனடா குடிமக்களுக்கு, அவர்கள் விரும்பும் நம்பிக்கையை சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்றும் உரிமை இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு இந்து சமயத்தினரைப் பாதுகாத்த காவல்துறைக்குப் பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.