ஜியோ டி.வி+ சமீபத்தில் ஏ.ஐ சென்சார் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது.ஜியோ டி.வி+ சமீபத்தில் ஏ.ஐ சென்சார் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது. இதை எனெபிள் செய்வதன் மூலம் திரைப்படம், வெப் சீரியஸில் அடல்ட் கன்டென்ட் உடன் காட்சிகளை தானாகவே blur செய்து விடும். அதோடு ஆடியோவை மியூட் ஆக்குகிறது. குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் படம் பார்க்கும் போது இந்த வசதி உதவியாக இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.
ஜியோ டி.வி+ என்பது ஒரு ஆப். ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும். இது ஜியோ செட்-டாப் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதனுடன் டிவி சேனல்கள் மற்றும் OTT சந்தாக்களும் வழங்கப்படுகிறது.
JioTV+ என்பது ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும் ஒரு இலவச சேவையாகும். இதில் 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் மற்றும் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, Zee5 மற்றும் பல முக்கிய OTT தளங்களையும் வழங்குகிறது.
இது JioTV-யில் இருந்து வேறுபட்டது. JioTV+ தொலைக்காட்சிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். JioTV+ ஆப்பில் ஏ.ஐ சென்சார் ஆப்ஷன் எனெபிள் செய்து அடல்ட் கன்டென்ட் காட்சிகளை blur செய்யலாம். குடும்பத்துடன் உங்களுக்குப் பிடித்த திரைப்படம் அல்லது வெப் சீரிஸ்களை சங்கடம் இல்லாமல் பார்க்கலாம்.